அரவிந்த்ராஜ் இயக்கத்தில், விஜயகாந்த் நடிப்பில், கடந்த 1986-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஊமை விழிகள்.
த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம், பெரும் வெற்றியை பெற்றிருந்தது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம், நடிகர் விஜயகாந்தை மீண்டும் திரையில் கொண்டு வருவதற்கும், முயற்சிகள் நடத்தப்பட உள்ளது.
இதுதான், நடிகர் விஜயகாந்த், காவல்துறை அதிகாரியாக நடித்த முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.