கேப்டன் விஜயகாந்த், கடந்த சில தினங்களுக்கு முன்பு, உடல்நலக்குறைவு காரணமாக, காலமானார். இதனை அறிந்த நடிகர் விஜய், அஞ்சலி செலுத்துவதற்கு சென்றிருந்தார்.
அப்போது, நடிகர் விஜயின் மீது செருப்பு வீசி, அவமரியாதை செய்யப்பட்டது. இதற்கு, பலரும் தங்களது கண்டனங்களை கூறி வந்தனர். இதற்கான காரணம் என்னவென்று தெரியாமல், பலரும் குழப்பத்துடன் இருந்தனர்.
இவ்வாறு இருக்க, புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, விஜயகாந்தின் மகன் சகாப்தம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு, நடிகர் விஜய் வரவேண்டும் என்று, கேப்டன் நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால், விஜய் கடைசி வரை, அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவே இல்லையாம். கேப்டனே நேரில் சென்று அழைப்பு விடுத்தும், விஜய் வரவில்லை என்பதால் தான், அவர் மீது ரசிகர்கள் கோபமாக இருந்தார்களாம்.
இதன் விளைவாக, விஜய் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.