தமிழகத்திலிருந்து பெங்களூரு செல்லும் வாகனங்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழியாக செல்வது வழக்கமான ஒன்றாகும் .இதனால், இன்று மதியம் வழக்கம் போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்த நிலையில் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மேலுமலை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதனையறிந்த மற்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை அங்கேயே நிறுத்தினா்.இத்தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினா் , தீயயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
இதனால்,கிருஷ்ணகிரி ஓசூா் அருகே கடுமையான போக்குவரத்து பாதிப்பு
ஏற்பட்டது. இதனால் அப்பகுதியிடையே வந்த வாகனங்கள் 10 கிலோமீட்டா் வரை வாகனங்கள் அணிவகுத்துறின்றது. இந்ந போக்குவரத்து நெரிசல் சுமாா் 2 மணி நேரத்திற்கு மேல் நீண்டு வருகிறது.அந்த டேங்கா் லாரியை எடுத்தால் தான் அங்கு முழுவதும் போக்குவரத்து நெரிசல் சீரடையும் என்று
தகவல் வெளிவந்துள்ளது.