விஜய் நடிக்கும் The Goat படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர், நேற்று வெளியானது. இதனை பார்த்த ரசிகர்கள், உற்சாகம் அடைந்தனர்.
ஒருசிலர், படத்தின் போஸ்டரில் உள்ள நுனுக்கங்களை ஆராய்ந்து வருகின்றனர். ஆனால், வேறு சிலர், இந்த படத்தின் போஸ்டர், எங்கிருந்து காப்பி செய்யப்பட்டது என்று தேடி வருகின்றனர்.
அந்த தேடுதலின் விளைவாக, பிக் பிரதர் என்ற சீன மொழிப் படத்தின் போஸ்டரில் இருந்து, இந்த போஸ்டர் காப்பி அடிக்கப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர்.