Connect with us

உயர்கல்வியின் பூங்காவாக தமிழ்நாடு விளங்குகிறது: மு.க.ஸ்டாலின்!

தமிழகம்

உயர்கல்வியின் பூங்காவாக தமிழ்நாடு விளங்குகிறது: மு.க.ஸ்டாலின்!

பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழா உள்பட அரசுத் திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி.

பின்னர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலை 10:30 மணியளவில் 38-வது பட்டமளிப்பு விழா தொடங்கியது.

விழாவில் , முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமருக்கு புத்தாண்டு வாழ்த்துகள் என்று கூறி உரையைத் தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது,

உயர்கல்வியின் பூங்காவாக தமிழ்நாடு விளங்குகிறது. பெண் கல்வியை ஊக்குவிக்கும்பொருட்டும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு மாணவர்கள் போட்டித் தேர்வுகள், ஆட்சிப்பணித் தேர்வுகள் போன்றவற்றுக்கு தயார் செய்யும் வகையில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

நான் முதல்வன் திட்டம் மூலம் 2 ஆண்டுகளில் 29 லட்சம்ட மாணவர்களுக்கு 32 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்றும் ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.

More in தமிழகம்

To Top