பேருந்துகளில் கட்டணம் குறைப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கடந்த 30ம் தேதியன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் ரூ.20 முதல் ரூ.35 வரை கட்டணம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 32 கி.மீ தொலைவில் இருப்பதால், அதற்கேற்ப கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, கோயம்பேட்டில் இருந்து திருச்சிக்கு புறப்பட்ட பேருந்துகள், இனி கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் என்பதால் ரூ.460 ஆக இருந்த கட்டணம் ரூ.430 ஆக குறைக்கபட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News