மதுரையில் பரபரப்பு: பெட்ரோலை உடலில் ஊற்றி; தனக்குத்தானே தீ வைத்து கொண்ட நபர்!

மதுரை கே.கே.நகரில் தனியார் கல்லூரி அருகே பெட்ரோல் நிரப்பிய கேனுடன் வாலிபர் ஒருவர் திடீரென்று பெட்ரோலை உடலில் ஊற்றிக்கொண்டு தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார்.

இதனால் உடையில் தீ பற்றி எரிந்த நிலையில் அலறியபடி துடிதுடித்து
கரிக்கட்டையாக ரோட்டில் விழுந்தார். இதனால் அந்தப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயில் கருகிய வாலிபரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீக்குளித்த வாலிபர் யார்? எதற்காக தீக்குளித்தார் அவர் கல்லூரி முன்பாக தீக்குளித்தது ஏன் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News