திருச்சி விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முனையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனையடுத்து விழாவில் பேசிய மோடி, கடந்த வருடம் டிசம்பர் 28ம் தேதி மறைந்த கேப்டன் விஜயகாந்த் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார்.
அதாவது, சினிமாவில் மட்டுமல்ல அவர் அரசியலிலும் கேப்டனாக இருந்து வந்திருக்கிறார். திரைப்படங்களில் அவரது செயல்பாடு காரணமாக மக்களின் இடத்தில் தனி இடம் பிடித்தார்.
அரசியல்வாதியாகவும் தேசிய நலனுக்கும் அவர் முன்னுரிமை கொடுத்து வந்திருக்கிறார். அவருக்கு என் அஞ்சலியை காணிக்கை ஆக்குகிறேன். அவரது குடும்பத்திற்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.