அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் அடுத்ததாக நடிக்க உள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு, 163 கோடி ரூபாய் சம்பளமாக வாங்க உள்ளாராம். இந்த திரைப்படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட், 300 கோடி ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், அஜித்தின் மார்கெட் மதிப்பு 250 கோடி ரூபாய் அளவில் இருப்பதால், படத்திற்கு நஷ்டம் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.
இருந்தாலும், சம்பளத்தை குறைக்காமல் அஜித் அடம்பிடிக்கிறார் என்றும், கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.