மைக்கில் மின்சாரம் பாய்ந்து பாடகர் பலி!

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள சந்தனவல்லி கிராமத்தில் இருக்கும் மகேந்தர் வீட்டில் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் குல வழக்கத்தின்படி எல்லம்மா சாமி வழிபாடு நடைபெற்றது.

வழிபாடு நிகழ்ச்சியில் அருகில் உள்ள மற்றொரு கிராமத்தை சேர்ந்த சிவக்குமார், கங்கையா ஆகிய உள்ளூர் கதா காலட்சேப பாடகர்கள் கலந்து கொண்டு பாட்டு பாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் கையில் பிடித்திருந்த மைக்கில் திடீரென்று மின்சாரம் பாய்ந்து இரண்டு பேரும் அங்கேயே சரிந்து விழுந்தனர்.

இதனால் உஷாரான பொதுமக்கள் உடனடியாக மின் இணைப்பு துண்டித்தனர்.

அவர்களில் சிவகுமார் சம்பவ இடத்திலேயே மரணமடைந்து விட்ட நிலையில் ஆபத்தான நிலையில் கங்கையாவை கிராம மக்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரச மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து ஏற்பட்ட இந்த விபத்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

RELATED ARTICLES

Recent News