ஒரு நாட்டை சேர்ந்தவர்கள், புதிததாக இன்னொரு நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும்போது, அங்குள்ள வியாபாரிகள், அவர்களை ஏமாற்றுவது வழக்கம். இந்த மாதிரியான சம்பவங்கள், இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினருக்கும், அவ்வப்போது நடந்து வருகிறது.
இந்நிலையில், தி இந்து என்ற பிரபல ஆங்கில நாளிதழ், 1974-ஆம் ஆண்டு நடைபெற்ற செய்தி ஒன்றை, மீள் பதிவு செய்துள்ளது. அதாவது, ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த பொறியாளர் ஒருவர், இங்கிலாந்து நாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர், புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதற்கு, லண்டனில் இருந்து மெட்ராஸ் ( இப்போதைய சென்னை ) -க்கு வந்துள்ளார். அப்போது, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து, அண்ணா சாலையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றிற்கு செல்ல, டேக்ஸி ஒன்றை பிடித்து, அதில் ஏறியுள்ளார்.
அந்த டேக்ஸி ஓட்டுநர், மீனம்பாக்கத்தில் இருந்து அண்ணா சாலைக்கு, 40 கி.மீட்டர் தூரம் என்றும், அதனால், ரூபாய் 350 தர வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த ஆஸ்திரேலிய பொறியாளர், அந்த பணத்தை தர சம்மதித்துள்ளார்.
இதையடுத்து, ஓட்டல் வந்ததும் பேசிய பணத்தை அந்த வெளிநாட்டு பயணி கொடுத்துள்ளார். ஆனால், அதன்பிறகே, தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை அவர் அறிந்திருக்கிறார்.
பின்னர், புத்தாண்டு கொண்டாடிவிட்டு, ஊருக்கு செல்லும் சமயத்தில், தன்னை ஏமாற்றிய டேக்ஸி டிரைவரை அந்த பொறியாளர் பிடித்துள்ளார். இதையடுத்து, 320 ரூபாயில், டேக்ஸி டிரைவர் செலவழித்தது போக, மீதமுள்ள 150 ரூபாயை மட்டும், திருப்பிக் கொடுத்துள்ளார்.
பணம் வந்தவரை லாபம் என்று கருதிய அந்த பொறியாளரும், பணத்தை பெற்றுக் கொண்டு, அங்கிருந்து கிளம்பியுள்ளார். அந்த டேக்ஸி டிரைவர் சவாரி கூலியாக பெற்ற 320 ரூபாய் என்பது, இன்றைய மதிப்பில், 10 ஆயிரம் ரூபாய் என்று கணக்கிடப்படுகிறது.