‘தி குட் ஜெர்மன்’ ‘ஸ்பீட் ரேசர்’மற்றும் ‘வால்கெய்ரி’ உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர். இவர் விடுமுறையை கொண்டாட நேற்று முன்தினம் தனது 2 மகள்களுடன் ஒற்றை இன்ஜின் கொண்ட சிறிய ரக விமானத்தில் கரீபியன் தீவுக்கு சென்றுள்ளார்.
அங்குள்ள பெகுய்யா என்ற சிறிய தீவில் இருந்து செயின்ட் லூசியா நகரத்திற்கு அந்த சிறிய விமானத்தில் சென்றுள்ளனர். அப்போது விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கரீபியன் தீவு அருகே கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானத்தில் இருந்த, கிறிஸ்டியன் ஆலிவர்(51), அவரது மகள்கள் மடிதா(12), அன்னிக்(10) மற்றும் பைலட் ராபர்ட் சாக்ஸும் ஆகிய 4 பேரும் பலியாகினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடலோர காவல்படையினர், மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.