250 ஆண்டு பாரம்பரியம் கொண்ட புதுச்சேரி ஆளுநர் மாளிகையை இடமாற்றம் செய்ய துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் வழங்கி உள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநரின் அலுவலகம் 250 ஆண்டு பழமை வாய்ந்தது. ஆங்கிலேயர் படையெடுப்பு, பிரெஞ்சுகாரர்களின் மீட்டுருவாக்கம் என பல்வேறு வரலாற்று பின்னணியை கொண்ட இந்த கட்டடம் தற்போது சேதமடைந்துள்ளது. இதனால் இந்த கட்டடத்தில் பராமரிப்பு பணிகள் செய்வது அவசியம் என பொதுப்பணித்துறை அரசுக்கு பரிந்துரை செய்தது.
இந்நிலையில் ஆளுநர் மாளிகையை இடமாற்றம் செய்ய துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் வழங்கி உள்ளார். புனரமைப்பு பணிகள் முடியும் வரை ஆளுநர் மாளிகை செயல்படாது. அதற்கு பதிலாக கடற்கரை சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் ஆளுநர் மாளிகை செயல்பட உள்ளது.