பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் தேதி எந்தவித அசம்பாவிதமும் ஏற்படக் கூடாது என நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆண்டு தோறும் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் படி தமிழ்நாடு முழுவதும் 1.2 லட்சம் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸ் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் மோப்ப நாய் உதவியுடன் ஆய்வுப்பணியை மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி, திருப்பூர், சேலம் மாவட்டங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ரயில் நிலையங்களில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயில்கள், மசூதிகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.