ஹோட்டல் புக் செய்து 4 வயது மகனை கொன்ற CEO..!

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுசனா சேத்(39). இவர் AI Lab நிறுவனத்தின் CEO ஆக இருந்து வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று வடக்கு கோவாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனது 4 வயது மகனுடன் அறை எடுத்துத் தங்கியுள்ளார். மறுநாள் காலை அங்கிருந்து பெங்களூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், அவர்கள் தங்கியிருந்த அறையைச் சுத்தம் செய்ய சென்ற பணிப்பெண் அறையில் ரத்தக்கறைகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சுசனா தனது மகனுடன் ஹோட்டலுக்கு வந்ததும் திரும்பிச்செல்லும் போது தனியாகச் சென்றதையும் பார்த்து சந்தேகம் அடைந்த போலீஸார் பெங்களூரு சென்று கொண்டிருந்த சுசனாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு இது குறித்து விசாரித்தனர்.

முன்னுக்கு பின் முரணாக பேசிய சுசனாவின் காரை கர்நாடக போலீஸார் சோதனை செய்ததில், மகனை கொன்று உடலை சூட்கேசில் வைத்து காரில் எடுத்து சென்றது தெரியவந்தது. சுசானாவை கைது செய்து விசாரித்ததில் கணவருடன் பிரிந்த காரணத்தால் மகனைக் கொன்றதாக அவர் தெரிவித்துள்ளார். பெற்ற தாயே, 4வயது மகனைக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News