அஇஅதிமுக கட்சியில் இருந்து பொதுக்குழுவால் நீக்கப்பட்ட ஓபிஎஸ் தரப்பு அஇஅதிமுகவினுடைய பெயரையும், சின்னத்தையும், கொடியையும் பயன்படுத்தக் கூடாது என்று உயர்நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு மேல்முறையீடாக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மேல்முறையீட்டு வழக்கு நீதி அரசர்கள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு முன்பு பல கட்ட விசாரணைக்கு பிறகு இன்று தீர்ப்புக்காக பட்டியலிடப்பட்டது.
ஓபிஎஸ் தரப்பு பொதுக்குழுவால் நீக்கப்பட்டது செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டதோ அதே அமர்வு முன்பாக இந்த வழக்கும் விசாரணையில் இருந்து இன்று தீர்ப்புக்காக பட்டியலிடப்பட்டது. தீர்ப்பின் விவரம் தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பு செல்லும் என்றும், ஓபிஎஸ் தரப்பு தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டிருக்கிறது.