Connect with us

ஜெட் வேகத்தில் செல்லும் ரஜினி! இன்னொரு படம் புக் பண்ணியாச்சு!

சினிமா

ஜெட் வேகத்தில் செல்லும் ரஜினி! இன்னொரு படம் புக் பண்ணியாச்சு!

ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படம் தான், ரஜினியின் கடைசி திரைப்படம் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது வந்துள்ள தகவலின்படி, ரஜினி இன்னும் இரண்டு திரைப்படங்களை தற்போது ஒப்பந்தம் செய்துள்ளாராம்.

அதாவது, 172-வது திரைப்படம், மாரி செல்வராஜை இயக்குநராக வைத்து உருவாக உள்ளது. இந்த படத்திற்கு பிறகு, ஐசரி கணேஷின் தயாரிப்பில் உருவாகும் படத்தில், ரஜினி நடிக்க உள்ளாராம்.

5 வருடங்களுக்கு ஒருமுறை திரைப்படங்களில் நடித்து வந்த ரஜினி, தற்போது வரிசையாக திரைப்படங்களில் நடித்து வருவது பலருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி, ஜெயிலர் 2 திரைப்படமும் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top