தெலுங்கானாவில் ஆட்சி பொறுப்பை ஏற்று இருக்கும் காங்கிரஸ் அரசு மகாலட்சுமி என்ற பெயரில் பெண்களுக்கு இலவச பேருந்து போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
அதிக அளவில் பயணிக்கும் பெண்கள் அரசு பேருந்துகளில் இருக்கைக்காக சண்டை போட்டுக் கொள்ளும் சம்பவங்கள் தினமும் அரங்கேறி வருகின்றன.
தற்போது சங்கராந்தி நெருங்கி வரும் நிலையில் உறவினர்கள் வீட்டுக்கு செல்வது, பொருட்களை வாங்க நகரங்களுக்கு செல்வது, விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்வது வழக்கம் இதனால் பெண்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளது.
நிர்மல் மாவட்டத்திலுள்ள மொகில் கிராமத்தில் அதிக அளவில் பெண்கள் பேருந்தில் ஏறிய நிலையில் இருக்கைக்காக அவர்கள் தலைமுடியை பிடித்து இழுத்து கடுமையாக ஒருவரை ஒருவரை தாக்கி சண்டை போட்டுக் கொண்டனர்.
சண்டை போட்டுக் கொண்ட பெண்களை சமாதானம் செய்ய பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பேருந்தில் இருந்த ஆண் பயணிகள் ஆகியோர் முயன்றும் முடியவில்லை.
எனவே ஒன்றுமே செய்ய இயலாது என்ற நிலையில் சண்டை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க பேருந்தை ஓட்டுநர் ஓட்டி சென்றார்.
பேருந்தில் தலைமுடியை பிடித்து சண்டை போடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.