கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சிஇஒ நியமனம்..!

சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டது.

புதிதாக கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கடந்த மாதம் 30ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதால் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகளால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய வசதிகள் செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சிஇஒ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நில நிர்வாக ஆணையரக இணை இயக்குனர் பார்த்திபன் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய சிஇஒ-வாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிளாம்பாக்கத்தில் பயணிகளுக்கு சிக்கல் எதுவும் இன்றி பேருந்துகள் இயக்கப்படுகிறதா? வசதிகள் முறையாக உள்ளதா? என்பது உள்ளிட்ட பணிகளை சி.இ.ஒவாக நியமிக்கப்பட்ட பார்த்திபன் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News