தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது ஞானவேல், லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ் என்று முன்னணி இயக்குநர்களின் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவரது பழைய காதல் கதை குறித்து, தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் ரஜினிகாந்தும், ஸ்ரீதேவியும் 22 படங்களுக்கும் மேல், ஜோடியாக இணைந்து நடித்துள்ளனர்.
இவ்வாறு பல்வேறு படங்களில் ஒன்றாக பணியாற்றியபோது, ரஜினிக்கு, ஸ்ரீதேவியின் மீது காதல் ஏற்பட்டுள்ளதாம். இந்த காதலை, அவரிடம் கூறுவதற்கு, ரஜினி ஸ்ரீதேவியின் வீட்டிற்கு சென்றுள்ளாராம்.
அப்போது, எதிர்பாராவிதமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாம். இதனை அபசகுணமாக கருதிய ரஜினி, தனது காதலை சொல்லாமலே, அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டாராம்.
இந்த தகவலை, இயக்குநர் பாலசந்தரே பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாகவும், சொல்லப்படுகிறது.