மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் மல்லிகை பூ அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ளது.
இதனால் உசிலம்பட்டி பூ மார்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது, அதன் அடிப்படையில்
ஒரு கிலோ மல்லிகை ரூ.2000,
முல்லை பூ ரூ.1200,
பிச்சி பூ ரூ.1000,
கனகாம்பரம் ரூ.800,
மெட்ராஸ் மல்லி பூ ரூ.500,
அரளி பூ ரூ.150,
சம்மங்கி பூ ரூ.70,
செண்டு மல்லி ரூ.30,
கோழிக்கொண்டை ரூ.20,
துளசி ரூ.20 என விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.5500 விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.