கங்குவா படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்..! புதிய லுக்கில் சூர்யா!

சிறுத்தை, வீரம், வேதாளம், விஸ்வாசம் என்று பல்வேறு ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் சிவா. இவர் தற்போது தனது கனவு படைப்பை, கங்குவா என்ற பெயரில் எடுத்து வருகிறார்.

சூர்யா, திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம், 12 மொழிகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின், கிளிம்ஸ் வீடியோ, பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், இன்று செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இதில், நிகழ்கால கெட்டப் ஒன்றிலும், சரித்திர கால கெட்டப் ஒன்றிலும், நடிகர் சூர்யா மாஸாக உள்ளார். இதுமட்டுமின்றி, KanguvaSecondLook என்ற ஹேஷ்டேக்கும், எக்ஸ் தளத்தில் டிரெண்டாகி வருகிறது.

RELATED ARTICLES

Recent News