சந்தானம் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் வடக்குப்பட்டி ராமசாமி. வரும் பிப்ரவரி இரண்டாம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது.
அந்த டிரைலரில் யாரோ ஒரு நபர், “கடவுள் இல்லை என சொல்லிக்கொண்டு சுற்றிக் கொண்டிருப்பானே அந்த ராமசாமியா நீ ?” என்று கேட்க அதற்கு சந்தானம் நான் அந்த ராமசாமி இல்லை என்று பதில் சொல்கிறார். இது ஈவே.ராமசாமி குறித்து சந்தானம் விமர்சித்து வசனங்களை வைத்துள்ளதாக சர்ச்சை கிளம்பியது.
எதிர்ப்புகள் வலுக்கவே ஒரு கட்டத்தில் சந்தானம் தனது வீடியோ பதிவை நீக்கிவிட்டார். இனி படத்தில் இந்த வசனம் இடம் பெறுமா இல்லையா என்பதை படம் வெளியான பிறகு தெரிய வரும்.