சினிமா
வசூலில் அதிரடி காட்டும் கேப்டன் மில்லர்..! இதுவரை எத்தனை கோடி வசூல்?
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் கேப்டன் மில்லர். இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ.16.29 கோடி வசூல் செய்தது. தற்போது படம் வெளியான 5 நாட்கள் ஆன நிலையில் ரூ.60 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.