அயோத்தி ராமர் கோயிலில் வரும் 22ம் தேதி சிலை பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு, அன்றைய தினம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுப்பு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், “இது தொடர்பாக நாடு முழுவதுமிருந்து அதிக அளவில் கோரிக்கை வந்தது. மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 22ம் தேதி அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில்துறை நிறுவனங்கள் பிற்பகல் 2.30 மணி வரை மூடப்பட்டிருக்கும்” என்றார்.
இது மட்டுமின்றி உத்தரபிரதேசத்தில் ஜனவரி 22ம் தேதி அன்று இறைச்சி, மீன் மற்றும் மதுபான விற்பனைக்கு அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.