மக்களவைத் தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு திமுக தலைமைக் கழகம் 3 குழுக்களை அமைத்துள்ளது.
திமுக அறிக்கையின் விவரம் வருமாறு: மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கை தயாரிப்பு குழு மக்களவை எம்.பி. கனிமொழி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், விவசாய அணிச் செயலாளர் ஏகேஎஸ் விஜயன், சொத்துப் பாதுகாப்புக் குழு செயலாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தொழில்நுட்ப அணிச் செயலர் டிஆர்பி ராஜா, வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், எம்.பி. ராஜேஸ்குமார், மாணவரணிச் செயலாளரும், எம்எல்ஏவுமான சிவிஎம்பி.எழிலரசன், மேயர் பிரியா ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
மக்களவை தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்டுள்ள குழுவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, (முதன்மைச் செயலாளர்), இ.பெரியசாமி (துணைப் பொதுச் செயலாளர்), க.பொன்முடி, (துணைப் பொதுச்செயலாளர்), ஆ.ராசா (துணை பொதுச் செயலாளர்), எம்ஆர்கே.பன்னீர்செல்வம் (உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதற்கான அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளனர். ஆனால் இந்த குழுக்களில் துரைமுருகன் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.