சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் கிளாம்பாக்கத்தில் 393 கோடி செலவில் புதிய பேருந்து முனையம் கட்டுப்பட்டு அண்மையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
இந்நிலையில், ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல தொடர்ந்து கோயம்பேட்டிலிருந்தே இயக்கப்படும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்கு இடம் இல்லை எனவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள பணிமனை கிடையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கிளாம்பாக்கத்தில் மெட்ரோ, புறநகர் ரயில் நிலையம் வரும் வரை கோயம்பேட்டிலிருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்க உள்ளதாகவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.