Connect with us

திடீரென உச்சம் தொட்ட அயலான்! என்ன அதிசயம்!

சினிமா

திடீரென உச்சம் தொட்ட அயலான்! என்ன அதிசயம்!

சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படமும், தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படமும், கடந்த 12-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியானது.

இந்த இரண்டு திரைப்படங்களும் கலவையான விமர்சனங்களையே, ரசிகர்களிடம் பெற்றது. ஆனால், ஆரம்பம் முதல் கேப்டன் மில்லர் படத்தின் வசூல் தான், முன்னணியிலேயே இருந்தது.

இந்நிலையில், 9-வது நாள் வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது. அதன்படி, ஒட்டுமொத்தமாக கேப்டன் மில்லர் திரைப்படம் 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம்.

ஆனால், அயலான் திரைப்படம் 65 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம். இதன்மூலம், அயலான் வெற்றி பெற்றிருப்பதாக, இணையத்தில் கூறப்பட்டு வருகிறது.

More in சினிமா

To Top