உத்தர பிரதேச மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தில் காமினி என்ற 5 வயது சிறுமி மொபைல் போனில் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மயக்கமடைந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் சிறுமியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
இது குறித்து அம்ரோஹா தலைமை மருத்துவர் கூறுகையில், ‘சிறுமியின் உடலை உடற்கூராய்வுக்காக ஒப்படைக்குமாறு குடும்பத்தினரிடம் முறையிட்டோம். ஆனால் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. சிறுமி மாரடைப்பால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் நோயால் இறந்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது’ என்றார்.
மேலும் கடந்த இரண்டு மாதங்களில் அம்ரோஹா மற்றும் பிஜ்னோர் மாவட்டங்களில் மாரடைப்பு காரணமாக இதேபோல் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பலியாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
மூத்த மருத்துவர் ராகுல் பிஷ்னோய் கூறுகையில், குளிர் காலநிலை காரணமாக மாரடைப்பு ஏற்படுவது பொதுவானதாக இருக்கலாம். ஆக்ஸிஜன் அளவு மற்றும் இரத்த அழுத்தம் அழுத்தம் பொதுவாக குறைந்து, இரத்த உறைவு அபாயத்தை அதிகரிக்கிறது. என்றார்.