சின்னத்திரையில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரக்ஷிதா. இவர், தனது சக நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை ரக்ஷிதா, பிரபல இயக்குநர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, இவர் கன்னட திரைப்படம் ஒன்றில், ஹீரோயினாக நடித்து வருகிறாராம். இந்த திரைப்படத்தின் இயக்குநரை தான், ரக்ஷிதா திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், இதுகுறித்து, இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.