உத்தர பிரதேச மாநிலம் அயோத்தில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் பிரதிஷ்டை விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாடு செய்தார்.
இன்று முதல் பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 3 மணி முதலே கோயிலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் பாதுகாவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.