Connect with us

லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?

சினிமா

லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?

3, வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

விஷ்னு விஷால், விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த திரைப்படத்தில், ரஜினிகாந்த், சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். வரும் 9-ஆம் தேதி அன்று, இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

ரிலீஸ்-க்கு சில நாட்களே இருப்பதால், படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக, இப்படத்தின் இசை வெளியீட்டு வரும் ஜனவரி 26-ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. சென்னை சாய்ராம் கல்லூரியில் தான், இந்த நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

More in சினிமா

To Top