அஜித்தின் துணிவும், விஜயின் வாரிசும், ஒரே நாளில் வெளியாக உள்ளது என்ற செய்தி தான், கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், இந்த செய்தியை அறிந்த விஜய், என்ன ரியாக்ஷன் கொடுத்தார் என்று தற்போது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, வாரிசு படத்தில் நடித்த ஷ்யாம், பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். வாரிசு படத்துடன், துணிவு படமும் வெளியாகிறது என்ற செய்தியை நான் தான் விஜய் அண்ணனிடம் கூறினேன்.
இதற்கு பதில் அளித்த அவர், ஜாலிப்பா.. வரட்டும் பா.. நம்ம நண்பர் தானே.. அந்த படமும் நல்லா போகட்டும்.. நம்ம படமும் நல்லா போகட்டும் என்று தெரிவித்துள்ளார்.