வித்தியாசமான முயற்சிகள் தமிழ் சினிமாவில், அவ்வப்போது ஒரு சில இயக்குநர்களால் நடத்தப்படும். அந்த வகையில், தமிழ் சினிமாவில், முதன்முறையாக ஏலியனை மையப்படுத்தி அயலான் என்ற திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, இப்படம் கடந்த 12-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியானது. கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மட்டுமே பாராட்டப்பட்ட இந்த திரைப்படம், கதை, திரைக்கதை என்று மற்ற தொழில்நுட்ப விஷயங்களில் விமர்சிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்று கூறி விளம்பரம் செய்யப்பட்ட இந்த திரைப்படம், வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படம் இதுவரை வசூலித்த தொகை எவ்வளவு என்ற விவரம் தெரியவந்துள்ளது. அதன்படி, இதுவரை 80 கோடி ரூபாயை இப்படம் வசூலித்துள்ளது.
விடுமுறை நாட்கள் அனைத்தும் முடிந்துவிட்டதால், இப்படம் 100 கோடி ரூபாய் என்ற வசூலை அடையாது என்றும் கூறப்படுகிறது.