டெல்லியில் ஐஎன்ஏ மெட்ரோ ரெயில் நிலையத்தில் நேற்று இரவு 7 மணியளவில் பயணிகள் மெட்ரோ ரெயிலுக்காக காத்திருந்தனர். அப்போது சமைபூர் பெட்லிக்கு செல்லும் மெட்ரோ ரெயில் வந்துகொண்டிருந்தபோது அங்கிருந்த இளைஞர் ஒருவர் திடீரென ரயில் முன் பாய்ந்துள்ளார்.
இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்துகொண்ட நபர் அஜிதேஷ் சிங் (வயது 30) என்ற இளைஞர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
டெல்லியில் மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்..!#Delhi | #MetroTrain | #viralvideo | #RajNewsTamil pic.twitter.com/tbw04Npsn4
— Raj News Tamil (@rajnewstamil) January 28, 2024