தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் தேமுதிக கட்சி கொடி கடந்த ஒரு மாதமாக அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இன்று முதல் மீண்டும் தமிழகம் முழுவதும் தேமுதிக கொடி முழு கம்பத்தில் பறக்க விட வேண்டுமென கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கட்சியின் கொடியை பிரேமலதா விஜயகாந்த் முழு கம்பத்தில் ஏற்ற முயன்றார். அப்போது திடீரென அறைகம்பத்தில் இருந்த கொடி அறுந்து விழுந்தது. இதையடுத்து மீண்டும் கொடியை கட்டி, அரை மணி நேரத்திற்கு பின் கொடி ஏற்றப்பட்டது.
கொடி ஏற்றும் போது கயிறு அறுந்து அரை கம்பத்தில் இருந்து கொடி விழுந்தது. ஒரு தடைக்கு பிறகு தான் ஒரு வெற்றி அமையும், அதற்கு இந்த கொடி அறுந்து விழுந்தது ஒரு எடுத்துக்காட்டு என அவர் தெரிவித்தார்.