சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும், காமெடியில் கலக்கி வருபவர் பாலா. சினிமா மட்டுமின்றி, சமூக சேவையிலும் அதிக ஆர்வம் கொண்ட இவர், அவ்வப்போது மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பெண் ரசிகை ஒருவர், தன்னுடைய பெயரை பச்சைக் குத்திக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
மேலும், இந்த மாதிரி ரசிகை கிடைப்பதற்கு, நான் தகுதியில்லாத ஆள் என்றும் உருக்கமாக பேசியுள்ளார்.
பெரிய நடிகர்களுக்காக, அவரது ரசிகர்கள் செய்யத் தயங்கும் விஷயத்தை, சின்னத்திரை நடிகருக்காக ஒருவர் செய்திருப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.