ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர், தனது சக ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஞ்சியில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ள பொரையாகட் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் காலை 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு ஆசிரியர்களின் உடல்கள் பள்ளியில் உள்ள அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தன. குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரும் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டார்.
ஆசிரியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.