நடிகர் அஜித் ‘துணிவு’ படத்திற்கு பிறகு விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

அஜர்பைஜானில் படத்தின் படப்பிடிப்புகள் நடந்துவந்த நிலையில் அங்கு முடிந்துள்ளது. அடுத்தகட்டமாக சென்னை அல்லது மும்பையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடக்கும் என கூறப்படுகிறது.
வரும் பிப்ரவரி 2ம் வாரத்தில் படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகும் என கூறப்படுகிறது. பிப்ரவரியில் ஹைதராபாத்தில் முடிவடைந்து ஏப்ரலில் படம் ரிலீஸ் ஆகும் என செய்திகள் வருகின்றன.