வாரத்தில் இனி 4 நாட்கள் மட்டுமே வேலை! – ஜெர்மனி அறிவிப்பு!

ஜெர்மனி தற்போது பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. பொருளாதார நிலைமையை சரிசெய்ய ஜெர்மனி புதிய சோதனை முயற்சி ஒன்றை மேற்கொள்ளவிருக்கிறது.

உலகில் வளர்ந்த நாடுகளான டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஸ்பெயின், இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகள் குறைவான வேலை நேரத்தைக் கடைபிடித்து வருகின்றன. இந்த நிலையில் ஜெர்மனியும் குறைவான வேலை நேரத்தைக் கடைபிடிக்க உள்ளது.

அதன்படி பிப்ரவரி 1ம் தேதி முதல், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாகவும் மீதமுள்ள 3 நாட்கள் விடுமுறை நாட்களாகவும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பணியாளர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமடைவதோடு அவர்களது செயல்திறனும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சோதனை நல்ல பலனை அளிக்கும் என தொழிற்சங்கங்களும் அரசும் எதிர்பார்க்கின்றன. இதில் ஜெர்மனியின் 45 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த சோதனை அடுத்த 6 மாதங்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் ஜெர்மனியில் நிலவும் குறைந்த பணியாளர்கள் பிரச்சினையும் தீர்வுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெல்ஜியத்தில் வாரத்திற்கு 40 மணிநேரமும், நெதர்லாந்தில் வாரத்திற்கு 29 மணிநேரம் மட்டுமே மக்கள் வேலை செய்கிறார்கள். வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே அவர்களுக்கு வேலை.

இந்த நடைமுறைகள் நல்ல பலன்களை அளிப்பதாக அந்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டே ஜெர்மனி இந்த சோதனை முயற்சியை அமல்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News