குடிபோதையில் பேருந்து நடத்துனரை தாக்கிய இளம்பெண் – அதிர்ச்சி வீடியோ

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் குடிபோதையில் கண்டெக்டரை தாக்கிய அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. ஹயாத் நகர் பஸ் டிப்போவில் இருந்து புறப்பட்ட பேருந்தில் இளம்பெண் ஒருவர் குடிபோதையில் பயணம் செய்துள்ளார்.

குடிபோதையில் இருந்த இளம்பெண் ஒருவர், 10 ரூபாய் டிக்கெட்டிற்கு 500 ரூபாயை கொடுத்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் அப்பெண், பேருந்து நடத்துனரை திட்டிக்கொண்டே அவரை தாக்கத்தொடங்கினார். மேலும் ஆபாசமாக திட்டியும், விடிவதற்குள் உன்னை கொன்றுவிடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கிடையே, தகவலறிந்த போலீசார், அந்த பெண்ணிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News