ராஜ் வலைதள செய்தி எதிரொலி.. ஆடிப்போன கோலிவுட்.. உடனடியாக மறுப்பு சொன்ன சிம்பு, விஷால், வரலட்சுமி..

நடிகை வரலட்சுமி, விஷாலை காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப்போவதாகவும், சில வருடங்களுக்கு முன்பு, பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட செய்தி அது. ஆனால், அதன்பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் சேரவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த சம்பவம் நடந்து 2 வருடங்கள் கழித்து, நடிகர் சிம்புவை , வரலட்சுமி திருமணம் செய்ய இருப்பதாக, தகவல் பரவி வந்தது.

இந்த தகவலை மையப்படுத்தியும், இதற்கு முன்னர், விஷால், வரலட்சுமி காதலிப்பது தொடர்பாக வெளியான செய்தியை ஒப்பிட்டும், ராஜ் தொலைக்காட்சியின் வலைதளப் பக்கத்தில், செய்தி ஒன்று வெளியானது.

இந்த செய்தி, இணையத்தில் டிரெண்டானதைத் தொடர்ந்து, சிம்பு, விஷால், வரலட்சுமி தரப்பினரின் கவனத்திற்கு சென்றது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அதாவது, சிம்பு மற்றும் வரலட்சுமி தரப்பினர், “தங்கள் இருவருக்கும் திருமணம் நடப்பதாக வெளியான செய்தியில் துளியும் உண்மை இல்லை” என்று கூறியுள்ளனர். மேலும், விஷால் தரப்பினர், “நாங்கள் இருவரும் காதலித்ததாக 2 வருடங்களுக்கு முன்பு வெளியான செய்தி உண்மை இல்லை ” என்று தெரிவித்துள்ளனர். இதன்மூலம், நீண்ட நாள் வதந்திக்கும், சமீபத்தில் பரவி வதந்திக்கும் முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.

RELATED ARTICLES

Recent News