‘சமூக நீதியே பாஜகவின் பிரதான நோக்கம்’ – நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதன்மூலம், பெண் நிதியமைச்சராக அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றார். இந்நிலையில், கடந்த ஆட்சி காலத்தில் பாஜக செய்த சாதனைகளை அவர் பட்டியலிட்டார். அவை பின்வருமாறு,

*கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் நேர்மறையான மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது.

*அனைத்து பகுதிகளிலும் அனைத்து மக்களுக்கான ஒருங்கிணைந்த வளர்ச்சியே அரசின் குறிக்கோளாக இருந்தது.

*சுய தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உருவாக்கப்பட்டன.

*அனைவர்க்கும் வீடு, குடிநீர், மின்சாரம், எரிவாயு சிலிண்டர் என பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

*80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கப்பட்டு வருகிறது.

*விவசாயியின் விளைபொருட்களுக்கு ஆதாரவிலை அதிகபட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

*சமூக நீதியே பாஜகவின் பிரதான நோக்கம்

*அரசின் அனைத்து வளங்களும் சமமாக அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

*சுமார் 25கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர்.

*7ஐஐடிகள், 7 ஐஐம்கள், 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

*முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 43கோடி இளைஞர்களுக்கு ரூ.22.5 லட்சம் கோடி தொழில் கடன் வழங்கப்பட்டுள்ளது.

*இதே திட்டத்தின் கீழ் 30 கோடி பெண்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

*2.3 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு சிறு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

*உலகின் சிக்கலான காலகட்டத்தில் ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றது.

இவ்வாறு பட்டியலிட்ட அவர், மிக பெரும்பான்மையுடன் பாஜக அரசுக்கு மீண்டும் மக்களின் ஆசி கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது என்று பெருமிதத்துடன் கூறினார்.

RELATED ARTICLES

Recent News