வெற்றிகரமான நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம், ஹீரோவாக நடிக்க ஆரம்பித்ததில் இருந்து, பல்வேறு தோல்வி படங்களை கொடுத்து வருகிறார்.
கடைசியாக இவர் நடிப்பில் வெளியான பில்டப், கிக் உள்ளிட்ட படங்களும், பலத்த தோல்வியை சந்தித்து இருந்தன.
இந்நிலையில், இவர் நடிப்பில் அடுத்ததாக, வடக்குப்பட்டி ராமசாமி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
சந்தானத்தின் திரை வாழ்க்கையிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்திற்கு, நடிகர் சந்தானம் 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார்.
தொடர் தோல்விகளை குவித்து வந்தாலும், சந்தானத்திற்கு அதிக சம்பளம் கொடுப்பது எப்படி என்று பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.