இந்த வருடம், ஏப்ரல் மாதத்தோடு, பாஜக தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வர உள்ளது. இதனால், இந்த ஆண்டு, இடைக்கால பட்ஜெட் மட்டுமே தயாரிக்கப்பட்டது.
இந்த பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், அடுத்த அரசு வரும் வரையில், நாட்டை வழிநடத்துவதற்கான திட்டங்கள் மட்டும் இடம்பெற்றிருந்தது.
அந்த வகையில், எந்தெந்த துறைகளுக்கு, எவ்வளவு ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பது தற்போது பார்க்கலாம். அந்த வகையில், ராணுவத்துறைக்கு ரூபாய் 6.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித்துறைக்கு 1.77 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே துறைக்கு 2.55 லட்சம் ரூபாயும், ரசாயனம், உரம் துறைக்கு 1.68 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், சாலை போக்குவரத்து துறைக்கு 2.78 லட்சம் கோடி ரூபாயும், தகவல் தொடர்புத்துறைக்கு 1.37 லட்சம் கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உணவு மற்றும் நுகர்வோர் நலன் துறைக்கு 2.13 லட்சம் கோடி ரூபாயும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறைக்கு 1.27 லட்சம் கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்துறைக்கு 2.03 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.