ஹேமந்த் சோரன் கைது பா.ஜ.க.வின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை! – முதல்வர் ஸ்டாலின்

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் தரம் தாழ்ந்த செயல் என முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் ‘புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி பழங்குடியின தலைவரை துன்புறுத்துவது தரம் தாழ்ந்தது.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது மூலம் பா.ஜ.க.வின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை வெட்ட வெளிச்சமாகியுள்ளது. விரக்தியின் வெளிப்பாடாக அதிகார அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதை ஹேமந்த் சோரன் கைது வெளிக்காட்டுகிறது.

பா.ஜ.க வின் அநாகரிகமான யுக்திகள் மூலம் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க முடியாது. பா.ஜ.க,வின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பணிந்து போகாமல் ஹேமந்த் சோரன் வலுவுடன் எதிர்த்து நிற்கிறார். அடக்குமுறைகளை தாண்டி பா.ஜ.க வுக்கு எதிரான போரில் உறுதி காட்டும் சோரனின் நிலைப்பாடு பிறருக்கு ஊக்கம் தரக்கூடியது என்று பதிவிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News