தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை, நடிகர் விஜய் தொடங்கியுள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்பை கடந்த 2-ஆம் தேதி வெளியிட்ட அவருக்கு, சினிமா பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும், பொதுமக்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறி வந்தனர்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு, நடிகர் ரஜினிகாந்த் இன்று வருகை தந்திருந்தார். அப்போது அவரிடம், நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், நடிகர் விஜய்க்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார்.