கோவையில் கடந்த ஆண்டு திறக்கப்பட்ட லுலு ஹைப்பர் மார்க்கெட் எனும் மாலில் உணவுபொருட்கள் முதல் எலக்ட்ரிக் பொருட்கள் வரை அனைத்து வகையான பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டே சென்றது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாப்பாநாயக்கன் பாளையத்தை சேர்ந்த ஒருவர் தனது மகளுக்காக சிக்கன் வாங்கியுள்ளார். வீட்டிற்கு சென்று சிக்கனை கழுவிய போது துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து லுலு மாலிற்கு அவர் வாங்கிய் சிக்கனுடன் வந்து மேலாளரிடம் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
உடனடியாக அந்த சிக்கன் அப்புறப்படுத்தப்படுத்தப்பட்டு அதற்கு பதிலாக பணமும் திருப்பி அவருக்கு அளிக்கப்பட்டது. லுலு மால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களிலும் கோரிக்கை எழுந்துள்ளது.