அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், அ.தி.மு.க. கூட்டணிக்காக பா.ஜ.க.வின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார்.

இவரது இந்த அறிவிப்புக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து ஒன்றை கூறியிருக்கிறார். அதாவது, கூட்டணிக்கான கதவுகளை பா.ஜ.க. திறந்து வைத்திருக்கலாம், ஆனால் அ.தி.மு.க. கதவை மூடிவிட்டது.

பா.ஜ.க. யாருக்கு வேண்டுமானாலும் கதவுகளை திறந்து வைத்திருக்கட்டும். தமிழ்நாட்டில் பா.ஜ.கவை யாரும் விரும்பவில்லை. பா.ஜ.க.வுடன் எப்போதும் கூட்டணி கிடையாது.

பா.ஜ.க.வுடன் கூட்டணி வேண்டாம் என்பது தொண்டர்கள் மற்றும் மக்களின் நிலைப்பாடு. அ.தி.மு.க. முன்வைத்த காலை பின் வைக்காது. இவ்வாறு ஜெயக்குமார் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News