மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 16 பேரும், முன்னாள் எம்பி ஒருவரும் பாரதிய ஜனதா கட்சியில் இன்று இணைந்தனர்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன், முன்னாள் எம்எல்ஏக்கள் கே.வடிவேலு, சேலஞ்சர் துரைசாமி, பி.எஸ்.கந்தசாமி, எம்.வி.ரத்தினம், ஆர்.சின்னசாமி, ஆர்.தங்கராஜ், வி.ஆர்.ஜெயராமன், எஸ்.எம்.வாசன், பி.எஸ்.அருள், ஆர்.ராஜேந்திரன், ஏ.ஏ.கருப்புசாமி, எஸ்.குருநாதன், செல்வி முருகேசன், ஏ.ரோகினி உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.
தேமுதிக முன்னாள் எம்எல்ஏ தமிழழகன் மற்றும் திமுக முன்னாள் எம்பி குழந்தைவேலு ஆகியோரும் பாஜகவின் இணைந்தனர்.